திருட்டு நடந்து 14 மணி நேரத்தில் திருடர்களை கைது செய்த கீழக்கரை காவல் துறையினர்…

கீழைநியூஸ் இனணயதளத்தில் தொடர் திருட்டு என்ற செய்தி இன்று காலை (04-12-2017) வெளியாகியது, அதே போல் கீழக்கரை சார்ந்த வாட்ஸ்அப் தளங்களான மக்கள் டீமிலும் பதிவாகியிருந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து கீழக்கரை ஆய்வாளர் திலகவதி உத்தரவின் பேரில் தென்கரை மகராஜா, சார்பு ஆய்வாளர் பொந்து முனியான்டி மற்றும் பூமுத்து ஜெயபிரகாஸ் மற்றும் கிரைம் காவலர்கள் இணைந்து திருடர்களை தேடும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். அப்பொழுது கீழக்கரை கடற்கரை அருகில் இருவரை பிடித்து விசாரனை நடத்தியதில் லட்சுமணன் வயது 19 மற்றும் செல்வம், வயது 14 ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

உடனே காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8500 ருபாய் ரொக்கம், 4செல்போன்கள், மெர்ரி கார்டு, பென்டிரைவ் ஆக ₹. 25,000/- மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடு செய்தனர். சம்பவம் நடந்தது 14 மணி நேரத்தில் கைது நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

2 Comments

 1. இதில் இருக்கும் 14.வயது சிறுவன் கீழக்கரையில் தொடர்திருட்டில் ஈடுபட்டி கொண்டிருக்கின்றான்.மூன்று முறை கீழக்கரை காவல்துறைக்கு கீழக்தகரை நகர்க SDPI.கட்சி சார்பாக தகவல் கொடுக்கபட்டு அழைத்து சென்று வார்னிங் கொடுக்கபட்டு அனுப்பி வைக்க படுகின்றது .

  தயவு செய்து கீழக்கரை காவல்துறை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கீழக்கரை நகர் SDPI. கட்சி சார்பாக கோரிக்கை ….

  இப்படிக்கு

  கீழக்கரை நகர் தலைவர்.
  கீழை அஸ்ரப்.
  SDPI.கட்சி ….

Comments are closed.