Home செய்திகள் ஊரடங்கு நீட்டிப்பு;டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்:-இரயில்வே துறை அறிவிப்பு..

ஊரடங்கு நீட்டிப்பு;டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்:-இரயில்வே துறை அறிவிப்பு..

by Askar

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் மே 3-ம் தேதி வரை ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டபோது, ரயில்வேயில் முன்பதிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஆரம்பம் ஆகியது. இதனால் ஆர்வத்துடன் பயணிகள் மளமளவென டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரயில்களின் இயக்கமும் ரத்தாகியுள்ளது. இதையடுத்து 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் பணம் வழங்கப்படவுள்ளது.

நேரடியாக கவுன்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுத்தவர்கள் ஜூலை 31-ம்தேதிக்குள் நேரில் சென்று டிக்கெட்டுக்கான முழு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!