தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது..
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி காவல்துறை பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக், எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின், திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா, அருப்புக்கோட்டை ஏஎஸ்பி காரத் கருண் உத்தவ் ராவ் ஆகியோருக்கும் எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி வடக்கு துணை ஆணையர் அன்பு, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி., ஆகவும், திருப்பூர் தெற்கு துணை ஆணையர் வனிதா, சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ரோகித் நாதன், மதுரை தெற்கு துணை கமிஷனர் பாலாஜி, நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி., அதிவீர பாண்டியன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.