பிப்ரவரி 12,ஆபிரஹாம் லிங்கன் பிறந்த தினம்.

பிப்ரவரி 12, 1809 ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவரான ஆபிரஹாம் லிங்கன் பிறந்த தினம்.ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர்.விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வழக்கறிஞர் என்று பல தொழில்களில் பயணித்துஅமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்து உலகத் தலைவர்களில் ஒருவராக இன்றும் போற்றப்படுகிறார்