உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி 10, 11, 12 மாணாக்கர், ஆசிரியர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018 – 19 கல்வி ஆண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் , இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர், நூறு சதவீத தேர்ச்சிக்கு நன்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு உச்சிப்புளி பேட்மின்டன் கிளப் சார்பில் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது. கிளப் தலைவர் கே.ஆர்.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் விகேஎம் செல்வகுமார், உறுப்பினர்கள் ரவீந்திரன், ஜாஹீர், அனுராஜ், முருகானந்தம், திருமேனி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.