சாயல்குடியில் நடந்த அரசு விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு ரூ.15.13 கோடி நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இன்று மாலை நடந்த அரசு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை சார்பில் 2 ஆயிரம் ஏழை பெண்களுக்கு ரூ.7.59 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம், ரூ.7.54 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார் விழாவில் அமைச்சர் பேசியதாவது: முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளன. 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் மில் துவங்கப்பட உள்ளது. முதுகுளத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 61.35 சதவீதம் பெண்கள் இலவச பேருந்து வசதியை பயன்படுத்தி உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது 18,164 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2,215 புதிய பேருந்துகள் மிக விரைவில் இயக்கப்பட உள்ளன. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 36 மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்றார்.விழாவில்போக்குவரத்துத் துறை சார்பில்ஓட்டுநர்களுக்கு பணிமூப்பின் அடிப்படையில் 4 பணியாளர்களுக்கு ஓட்டுநர் போதகர் ஆகவும், பணிமூப்பு அடிப்படையில் நடத்துநர் 15 பேருக்கு 15 பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு உத்தரவு, மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் 53 பயனாளிகளுக்கு மின் இணைப்பு உத்தரவு, மின்சார விபத்தால் உயிாிழந்தோரின் வாாிசுதாரருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) ஜெயந்தி, கண்காணிப்பாளர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..