கடைகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள சந்தையில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந் கடைகள் உள்ளது.இதில் சிறு வியாபாரிகள் பலசரக்கு கடைகள் காய்கறி கமிஷன் கடைகள் பூ வியாபாரிகள் தேனி ரோடு வியாபாரிகள் என 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சந்தையில் உள்ள அனைத்து கடைகளை அளவீடு செய்து ஏலம் விடுவதாக அறிவித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் தலைமையில் மேற்பார்வை அளவையாளர்கள் வந்து அனைத்து கடையிலும் அளவீடு செய்து வருகின்றனர்.இதனைக் கண்டித்து இன்று அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் சந்தைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.உசிலம்பட்டி மையப்பகுதிகளிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சந்தை பகுதியில் சாமான்கள் வாங்க வந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உசிலை சிந்தனியா