பயணிகளை அச்சுறுத்தும் பேருந்து படிக்கட்டு.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் – திருமங்கலம் வரை செல்லும் TN58N0571 மாநகர பேருந்தின் படிகட்டுகள் சேதமடைந்த விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக பயணிகள் அச்சத்துடனே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இந்த பேருந்தில் பெரும்பாலும் கிராம புற பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் பயணித்து வருவதோடு வயதானவர்கள், பணிக்கு செல்வோர் என பலரும் இந்த பேருந்தை நம்பி இருந்து வருகின்றனர்.மேலும் இதுபோன்று முறையான பராமரிப்பு இன்றி காணப்படும் மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சிரமத்துடனே தங்களது பயணத்தை மேற்கொள்வதாகவும், மழைக்காலங்களில் பேருந்துக்குள்ளேயும் மழைநீர் விழுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.தனியார் பள்ளி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வை போன்று அரசு பேருந்துகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும்,இதுபோன்ற பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ள பேருந்துகளை அடையாளம் கண்டு உரிய முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்