பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு

 வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகிமை செல்வம் தலைமையில் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து 1 முதல் 12 வார்டு உறுப்பினர்களாக திருமலை, ஜெயலட்சுமி, உஷா, நந்தினிதேவி, ரஞ்சித்குமார், சுந்தர்ராஜி, காயத்ரி, கண்ணகி, திவ்யபிரபா, சலுஜா, கவிதா ஆகியோருக்கு பதவி பிரமானம் செய்யப்பட்டது.ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.