பழக்க தோஷத்தில் முன்னாள் அமைச்சரை மறிக்க சென்ற பொதுமக்கள்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாறி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பொதுமக்களுக்கு இன்னும் புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் பற்றி இன்னும் பிடிபடவில்லை என்றேத் தெரிகிறது.இதனை மெய்பிக்கும் சம்பவம் உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் வந்தார்.முன்னதாக கீழப்புதூரில் கட்சிக்கொடி ஏற்றுவதாக இருந்தது.இதற்காக அங்கு அதிமுகவினர் கூடி நம்ம அமைச்சா (ஆர்பி.உதயக்குமார்) இன்னும்; சிறிது நேரத்தில் வருகிறார் என பேசிக் கொண்டிருந்தனர்.இதனை அறிந்த கீழப்புதூர் 14வது வாா்டு பகுதி மக்கள் அமைச்சர் வருகிறாரா என கேட்டு விட்டு தங்கள் பகுதியில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி கீழப்புதூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவலறிந்த போலிசாரும் அதிமுகவினரும் வருவது முன்னாள் அமைச்சர்.இவரிடம் கூறி எதுவும் ஆகவில்;லை.என அவர்களுக்கு புரியச் செய்து கலைந்து போகச் செய்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலையுடன் கூடிய பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா