ரோட்டரி சங்கம் சார்பில் பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சி.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் விழா நிகழ்ச்சி கீழக்கரை மக்தூமியா மேல்நிலை பள்ளியில் கொண்டாடப்பட்டது இதில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பட்டய தலைவர் Rtn.Dr. அலாவுதீன் தலைமையிலும் வட்டார மருத்துவர் Rtn.ராஷிக்தீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் அதில் ஆதரவற்ற பெண் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் , மற்றும் 5 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன், செயலாளர் சிவகார்த்திக், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர் சுந்தரம்,முன்னாள் செயலாளர் அல்நூர் ஹசன் , சதக்கத்துல்லா, சேக் உசேன், தர்மராஜா, கபீர், மக்தூமியா உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர்