இராமநாதபுரத்தில் அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அசாமில் நேற்று (23/09/2021) காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை கண்டித்து மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் இன்று(24/9/21) இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் எஸ்டிடி யூ மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்புரையாற்றினார், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், பாப்புலர் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முகமது மன்சூர் கண்டன உரையாற்றினார்கள், மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹனீப் மற்றும் தொகுதி தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினர்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயல்வீரர்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal