
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சென்னையில் காவல்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஜெயந்தி (30) என்ற மனைவியும் தருண்குமார்(7) என்ற மகனும் ரஞ்சிதா(4) என்ற சிறுமியும் இருந்தனர்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது ஊரில் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து இருந்தார் ராஜேஷ்குமார்.இந்நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்து உள்ளது.இதனால் மனமுடைந்த அவரின் மனைவி ஜெயந்தி நேற்று விடியற்காலை விரிஞ்சிபுரம் ரயில்வே கேட் அருகில்தனது மகளுடன் சென்னை நோக்கி சென்ற ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.தாயும் சிறுமி மகளும் தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.