Home செய்திகள் கொங்கபட்டியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் புகுந்து விபத்து

கொங்கபட்டியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் புகுந்து விபத்து

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. உசிலம்பட்டி அருகே கொங்கப்;பட்டியில் சென்று கொண்டிருந்த போது வடுகபட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாட்கள் குப்பைஅள்ளும் வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து குப்பைஅள்ளும் வாகனத்தில் மோதாமல் இருக்க ப்ரேக் போட்டார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரமாக இருந்த இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடைக்குள்புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. மேலும் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்ப்பட்ட பயணிகள், குப்பை அள்ளும் வாகனத்;தில் சென்ற 4 பேர் என அனைவரும் அதிர்ஷடவசமாக சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிர் தப்பினர். மேலும் இருசக்கரவாகன பழுது நீக்கும் கடையில் பழது நீக்குவதற்காக நிறுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!