Home செய்திகள் கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடிய பெண் கைது.

கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடிய பெண் கைது.

by mohan

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிசேகம் நிகழ்ச்சி 01.02 2021 ந்தேதி நடைபெற்ற போது சாமி கும்பிட போன வயதான பெண்களை குறிவைத்து அதன்படி 1 ) இந்திராணி 2 ) ஞானசுந்தரி தமிழரசி 4 அழகம்மாள் ஆகிய நான்கு வயதான பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுமார் 18-1 / 2 தங்க செயின்கள் யாரோ திருடி சென்று விட்டார்கள் என தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது மேலும் வழக்கில் தொடர்புள்ள நபர்களை கண்டுபிடிக்க மதுரை மாநகர் ஆணையர் உத்தரவின் பேரில் மதுரை மாநகர் துணை ஆணையர் குற்றப்பிரிவு வழிகாட்டுதலின் படி தல்லாகுளம் சரக குற்றம் உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது . தனிப்படையினர் தீவிர முயற்சியால் வழக்கில் தொடர்புள்ள கோவை மாவட்டம் துடியலூர் ஊரை சேர்ந்த 1 ) ஜெயந்தி 2 திவ்யா 3 அமுதா மற்றும் திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த பிரியா ஆகிய நால்வரையும் தல்லாகுளம் சரக தனிப்படை சார்பு ஆய்வாளர் சுந்தரேஸ்வரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் மாநகர் நுண்ணறிவுபிரிவு தலைமை காவலர் உதவியுடன் தல்லாகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் பீரதீப் 02.02 21 ந்தேதி கைது செய்து 15-1 / 2 பவுன் தங்கநகைகளை மீட்டு மேற்படி பெண் எதிரிகளை நீதித்துறை நடுவர் ஆஜர்படுத்தி சிறையில அடைக்கப்பட்டனர் 24 மணி நேரத்தில் பெண் எதிரிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட மாநகர் துணை ஆணையர் பழனிக்குமார் தல்லாகுளம் சரக குற்றம் உதவி ஆணையர் ரவி தல்லாகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேசன் நாரயணபுரம் பொது மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!