விளாம்பட்டியில் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தமிழக அரசு என வனத்துறை அமைச்சர் பெருமிதம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், விளாம்பட்டி ஊராட்சியில் முத்தாலம்மன் கோவில் முன்பு தமிழக அரசின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் யாகப்பன் வரவேற்று பேசினார். தமிழக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் , தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகம் மாவட்ட அலுவலர் தணிகாச்சலம், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசியதாவது: தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சராக இருப்பவர் அன்றாட விவசாயிகளின் நிலை நன்கு அறிந்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாகவே தனியாரிடம் நெல் மூட்டை ரூபாய் 1100, விற்பனையாவது அறிந்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசினுடைய விலைப்பட்டியல் சேர்ந்து மாநில அரசின் மானியமாக 1958 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி கொள்முதல் செய்கிறது. இதனை அறிந்த இங்கிருந்த விளாம்பட்டி யைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க பெருமிதத்தோடு கூறினார். அதுமட்டுமல்லாமல் வேளாண்மை சட்டத்தை திருத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ளது விவசாயிகளின் பாதுகாப்புக்கு தான் என்பதை அறிந்துதான் இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை. இது நிச்சயமாக விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை தகுந்த வகையில் இருக்கிறோம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினார், இந்நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிழவ ராஜா, முனி ராஜா, செல்வராஜ், வைகை பாலன்,செல்வி ஜெயசீலன், பாப்பாத்தி அம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் ராஜா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்னுத்துரை, டி .ஆர்.பாலமுருகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் முனியப்பன், காட்டுராசா, ராஜா,தவமணி, செந்தில்குமார்,அண்ணாமலை, குணசேகரன், சங்கையா,நகரபொறுப்பாளர்கள் முத்து,சரவணகுமார்,பூக்கடை சரவணன்,செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image