காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தர்ணா .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சைமிளகாய் கோட்டை ஊராட்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணியரசன் இவர் இப்பகுதி உள்ள தனியார் வாகனங்களுக்கு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் மர்ம நபர்கள் தன்னை தாக்கியதாக கூறி நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடம்பில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டார் இதையடுத்து செம்பட்டி காவல் நிலையத்திலும் தன்னை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார் இந்நிலையில் இவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டார் அப்போது அவர் செய்தியாளரிடம் அவர் கூறும் பொழுது எனது சொந்த ஊர் பச்சைமலை கோட்டை அருகே சுக்லாபுரம் நான் லாரி மட்டும் டிராக்டர் அவளுக்கு ஓட்டுநராக வேலை செய்து வருகின்றேன் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமலாபுரம் அருகே எனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டு கார்களில் வந்த ஒரு கும்பல் என்னை துரத்தியது நான் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது சின்னாளபட்டி செல்லும் சாலை நடுப்பட்டி பகுதி அருகே என்னை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள கிரசர் இல் வைத்து என்னை கொலை செய்யும் நோக்குடன் பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்து தற்போது நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நான் செம்பட்டி காவல் நிலையத்தில் என்னை கொலை செய்யும் நோக்குடன் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே நான் தர்ணாவில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார் இதையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து தர்ணாவை கைவிட்டார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image