மீனாட்சியம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி.

மீனாட்சியம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.அதற்காக ஒவ்வொரு வருடமும் வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படும்.ஆனால் கடந்த சில வருடங்களாக தெப்பக் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் நிலை தெப்பமாக பவனி வந்தனர்.அதன் பின்னர் இந்த ஆண்டு தெப்பக்குளம்புனரமைக்கப்பட்டு வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு அங்கிருந்து பனையூர் கால்வாய் மூலம்தெப்பக் குளத்தில் முழு கொள்ளளவை எட்டும் வகையில் முழுமையாகதண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.மேலும் இந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ள தைப்பூசத் அப்பர் திருவிழாவிற்காக இன்று தெப்பக்குளத்தில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் திருக்கோவில்இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முகூர்த்த காலுக்குவிசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டுதெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image