உசிலம்பட்டி – அரசு பெண் ஊழியரைப் பார்த்து அமைச்சர் ஆர்பி உதயக்குமார் திட்டியதால் அப்பெண் அழுத சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இன்று தமிழகம் முழுவதும் தமிழக அரசின் உத்தரவுப்படி தைப்பொங்கல் முன்னிட்டு குடும்ப அடைடைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 உடன் அரிசி,கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வார்டிலிலிருந்தும் அரசு ஊழியர்கள் தலா 5 பயனாளிகளை அழைத்து வந்திருந்தனர்.உசிலம்பட்டி கீழப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த (கிளர்க்) அரசு பெண் ஊழியர் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்தார்.அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அடுத்து பயனாளிகளை வரிசைப்படுத்தவற்காக எழுந்தார்.இதனால் கடுப்பான அமைச்சர் யாரும்மா நீ..நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே..உனக்கும் எங்களுக்கும் ஏதும் வாய்க்கா தகராறா..எதுன்னாலும் கூட்டம் முடிச்சபிறகு பேசும்மா எனக்கூறினார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் ஊழியர் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.கூட்டம் முடியும் வரை அழுது கொண்டே இருந்தார்.பொது இடமென்று பாராமல் அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image