வலையங்குளத்தில் மோடித் இடத்தில் வீடுகட்டியவர்களுக்கு மூன்று வருடங்களாக பனம் வழங்காத குடிசை மாற்று வாரியம் .

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் மோடித் இடத்தில் வீடுகட்டியவர்களுக்கு மூன்று வருடங்களாக பனம் வழங்காத குடிசை மாற்று வாரியம் .30க்கும் மேற்பட்ட பயனாளிகள் வீடு கட்ட கடன் வாங் பய பரிதவிப்புமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் வலையங்குளம் கிராமம் உள்ளது.இங்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பிரதமர் மோடியின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு 2 லட்சத்து பத்தாயிரம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த ரூபாய் குடிசை மாற்று வாரியம் மூலம் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கி வீடு கட்டுவதற்கு முதல் கட்டமாக பேஸ் மட்டம் அளவில் போட்டோ அடுத்து லிண்டல் மட்டத்திற்கு ஒரு போட்டோ மற்றும் மீண்டும் முடிந்ததும் ஒரு போட்டோ என 3 போட்டோ மட்டும் கொடுத்தால் மூன்று கட்டங்களில் பணம் தருகின்றனர்.ஆனால் வளையங்குளத்தில்உள்ள 2018 ஆம் ஆண்டு 18 பயனாளிகள் விண்ணப்பித்தனர். இதேபோல் 2019 ம் ஆன்டு 8 பேர்2020ம் ஆண்டு 7 பேர் விண்ணப்பித்தனர்.இதில் இவர்களுக்கு ஆர்டர் காப்பி வழங்கியுள்ள குடிசை மாற்று வாரியம் போட்டோ ஆகியவை பெற்றுக்கொண்டு கடந்த மூன்று வருடங்களாக பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர்.இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை கேட்டால் முறையான பதில் சொல்லாததால் ஏமாற்றமடைந்த மக்கள் கடன் வாங்கி கஷ்டப்படுவதாக புகார் கூறுகின்றனர்.பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டினால் இரண்டு லட்சத்தி பத்தாயிரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் தற்போது மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.இவர்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image