மதுரை விமான நிலையத்தில் கமலஹாசன் பேட்டி

மக்களிடம் நல திட்டங்கள் பற்றி பேசும்போது சுவாரசியம் குறைகிறது, ஆனால் ஊழல் பற்றி பேசும்போது குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள் – மதுரை விமான நிலையத்தில் கமலஹாசன் பேட்டிலஞ்ச பட்டியல் வெளியிடுவதற்கான பாதி வேலையை முதல்வர் குறைத்து விட்டார் – மதுரை விமான நிலையத்தில் கமலஹாசன் பேட்டிமூன்றாம்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்துவிட்டு மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தவரை அக்கட்சியினர் சால்வை வழங்கி வரவேற்றனர், அதனை பெற மறுத்தவர், தொடர்ந்து செல்பி எடுக்க முயன்ற தொண்டனையும் தடுத்து நிறுத்தினார். பின்னர் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மக்கள் நீதி மைய தலைவர்களும், தொண்டர்களும் உள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.லஞ்ச பட்டியல் வெளியிடுவேன் என்று கமல் ஹாசன் கூறியது திமுகவை மையப்படுத்தி பேசுவதாக அதிமுகவினர் கூறிவருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குஊழல் பட்டியலை திமுக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது, நான் லஞ்ச பட்டியலைதான் வெளியிட்டிருந்தேன், ஊழல் பட்டியல் இனிமேல்தான் வெளியே வரும், அதிக ஊழல் நடந்திருக்கிறது,இரண்டு கட்சிகளின் ஊழல்பட்டியல் சொல்வதற்கு நேரம் இருக்கிறதா என்று சொல்லும் போது பாதி வேலையை முதலமைச்சர் எடுத்துக் கொண்டதால்,அதனால் அவர்களைப் பற்றி நான் சொல்வது..! மற்றவர்களைப் பற்றி முதல்வர் சொல்வதும்…! ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த வேலைப்பளுவை எனக்கு குறைத்துள்ளதற்கு நன்றி.தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் மையப்படுத்தி பேசிய விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குதேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் தான் முக்கியம், அவர்களுக்கு நலத்திட்டங்கள் தான் முக்கியம். மற்ற கட்சிகளின் குற்றங்களை மக்களுக்கு தெரிந்த விஷயமே, அதனை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது.அதனால் அவர்களுக்கு நல திட்டங்கள் பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது, ஆனால் ஊழல் பற்றி பேசும்போது குலுங்கி குலுங்கி சிரித்தார்கள். அவர்கள் தெரிந்த மற்றும் அனுபவிக்கும் விஷயம் தீர்த்துவிடுவேன் என்று பலர் சொல்லியும் தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் விஷயம் அதனால் அதை பேசுகிறேன்.மற்றபடி எனக்கு மக்களுடன் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது .பணபலம் அதிகாரபலம் இரண்டுக்குமிடையே கமல்ஹாசன் எந்த பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறார் என செய்தியாளரின் கேள்விக்குமக்கள் பலம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image