
ரீவில்லிபுத்தூரில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.அவர்கள் குடும்பத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகை வழங்கினார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கும் அத்திதுண்டு என்ற இடத்தில் பேமலையாள் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிக்கச் சென்ற கோட்டைப்பட்டி கிராமபகுதியை சேர்ந்த கோபிசங்கர், பால்பாண்டி, முத்தீஸ்வரன் ஆகியோர் நீரின் வேகத்தை தாங்க முடியாததால் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.அவர்கள் மூவரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இறந்த 3 இளைஞர்களின் குடும்பத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார்.மேலும் முதலமைச்சர் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்.இதில் மாவட்ட கவுன்சிலர் கணேசன்,வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா,மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் அய்யனார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்