Home செய்திகள் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களின் கல்வி கட்டணம் முழுவதையும் திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி

அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களின் கல்வி கட்டணம் முழுவதையும் திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட விளச்சேரி பகுதியில் உள்ள 1960 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பிரசவ மருத்துவமனை செயலிழந்து இருப்பதை தற்போதைய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்டோர் மருத்துவமனையை மீண்டும் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது;

தற்போது தனியார் மருத்துவமனையில் மக்கள் செல்ல ஆர்வம் காட்டி வருவதால் கேட்பாடேற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகளை மீண்டும் புதுப்பிக்க குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.தமிழக முதல்வர் எந்த மக்களை சந்திக்க ஊர் ஊராக செல்கிறாரோ அந்த மக்களையே தான் எதிர்க்கட்சி தலைவர்களும் சந்திக்க செல்கின்றனர், அவர்களை போலீசை காட்டி பயமுருத்தினால், மூன்று மாதத்திற்குப் பிறகு அதே போலீசார் முதல்வரை பயமுறுத்தும்.இரவல் கட்சியாகத்தான் பாஜக தமிழகத்தில் இருந்து வருகிறது, நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியாகவே தான் அமித்ஷா வருகைக்கு பின்னரும் அமையும்.குறிப்பாக 2018 ல் தமிழகம் வந்த அமித்ஷாவால் 2019 தேர்தலில் பாஜகவுக்கு இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் இழக்க நேரிட்டது, தற்போதும் அதே நிலைதான் ஏற்படும்.7.5% இட ஒதுக்கீட்டை வெறும் விளம்பரத்துக்காக மட்டும் அதிமுக பயன்படுத்தி விடக்கூடாது தொடர்ந்து அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.தற்போது மு. க. ஸ்டாலின் அரசு பள்ளியில் பயின்ற நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களின் கல்வி கட்டணம் முழுவதையும் ஏற்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!