மதவாதத்தை எதிர்க்கக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும், பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநிலத் தலைவர் சேக் அன்சாரி பேட்டி.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநிலத் தலைவர் சேக் அன்சாரி செய்தியாளரிடம் கூறியதாவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் போன்றே சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் கால தாமதம் செய்யக்கூடாது, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்திருக்கிறது பாஜக. மதவாதத்தை எதிர்க்கக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அந்தந்த கட்சிகளின் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்