இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் SDPI கட்சி அமோக வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நடைபெற்ற மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி அதிக வாக்குகளுடன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி  வெற்றியை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான ADMK, DMK, CONGRESS, MMK மற்றும் பல கட்சிகள், இயக்கங்கள் ஆதரவுடன் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் SDPI கட்சி கம்யுனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு அனைத்து வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வெற்றி வாகை சூடியுள்ளது. ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள் என்ற மொத்தம் 7 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

அதன் விபரங்கள்  தலைவி : கண்ணகி(எ) தில்சத் பேகம்( வாக்குகள் : 1164), உறுப்பினர்கள்: அக்பர்ஜான் பீவி (1153), சும்கா அம்மாள் (1156), பானு பாத்திமா (1144), சுகர் நிஷா (1136), இந்திரா(1138), மலைச்செல்வி(1146).

எஸ்.டி.பி. கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image