பாரத சாரண மாணவர்களுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரடாபட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக அமைதி தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி, பள்ளியில் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டேபிள் டென்னிஸ் கூடத்தை திறந்து வைத்து உலக அமைதி தினத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்ட ஆட்சியர் சாரண சாரணிய மாணவர்களுக்கு உலக அமைதி தினத்தையொட்டி மகாத்மா காந்தி அடிகள் அகிம்சை அமைதி மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கோவிந்தராஜலு, வட்டாட்சியர் மலர்கொடி, மண்டல துணை தாசில்தார் சரளா ,ஒன்றிய பொறியாளர்கள் சௌந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ம முத்துலட்சுமி முருகேசன், ஷகிலா, சுப்பராயன் தரடாப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் வெங்கடேஷ் செய்திருந்தார்

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image