Home செய்திகள் கொரோனா நிவாரண உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு-தென்காசி ஆட்சியர் அறிவிப்பு…

கொரோனா நிவாரண உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு-தென்காசி ஆட்சியர் அறிவிப்பு…

by mohan

தென்காசி மாவட்டத்தில் இதுவரை கோவிட்-19 நிவாரண உதவி தொகை ரூ.1000 பெறாத மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவிட் – 19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவிலினை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசால், தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.இத்திட்டமானது தென்காசி மாவட்டத்தில் கடந்த 29.06.2020 முதல் செயல்படுத்தப்பட்டு இது வரை 14094 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வினத்தில் மேற்படி ரொக்க தொகை பெறாது விடுபட்ட நபர்களுக்காக கடந்த 10.08.2020, 11.08.2020 மற்றும் 13.08.2020 ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடத்தி தகுதியான நபர்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று மேற்படி ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வினத்தில் நாளது வரை மேற்படி ரொக்க நிவாரணம் பெறாத தென்காசி மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இருப்பின் மற்றுமொரு வாய்ப்பாக 07.09.2020 இன்று மற்றும் 08.09.2020 நாளை ஆகிய இரு நாட்களில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04633 290548 மற்றும் கைபேசி எண். 9443621240 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு தொடர்பு கொள்ளும் தகுதியான நபர்களுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்படி நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!