மர்மச்சாவுக்கு சிபிஐ விசாரானை கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தில் அணைக்கரை முத்து மர்மசாவுக்கு, சிபிஐ விசாரானை அமைக்கவும், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் புதிய தமிழகம் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் வெற்றிக்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.வாடிப்பட்டி ஒன்றியச் செயலர் நாகமணி, மாவட்ட துணைச் செயலாளர் பச்சையப்பன், செய்தி தொடர்பாளர் வினோத்குமார், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் ஆட்டோ பாண்டி, மற்றும் நிர்வாகிகள் நாகையா, ஆனந்த், பாலு, கருப்பத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image