Home செய்திகள் கொரோனா எதிரொலி காரணமாக க.விலக்கு அரசு நூற்பாலை தற்காலிகமாக மூடல்.

கொரோனா எதிரொலி காரணமாக க.விலக்கு அரசு நூற்பாலை தற்காலிகமாக மூடல்.

by mohan

தேனி மாவட்டம் க.விலக்கு அருகிலுள்ள அரசு நூற்பாலையில் அலுவலக பணியாளர் உட்பட 385 பேர் மூன்று சிப்ட்டுகளாக ஆலையில் பணி புரிந்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக கடந்த 7 ஆம் தேதியன்று 293 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை 11 மணியில் இருந்து தற்காலிகமாக ஆலை மூடப்பட்டது. மேலும் ஆலையில், கொரோனா டெஸ்ட் எடுக்காத (விடுபட்ட) பணியாளர்களுக்கு நேற்று பொது சுகாதாரத் துறையினர் சளி உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்தனர்.இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில்,

கொரோனா எதிரொலி காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆலையின் நுழைவு வாயில் முன்பு சானிடைசர் சோப்பு ஆயிலில் கைகளை நன்கு கழுவியவர்களை கேட்டில் வெப்பநிலைமானி சோதனைக்கு பின்னர் ஆலையின் உள்ளே பணிக்கு அனுமதிக்கப்படு கின்றனர். மேலும் ஆலை பகுதியில் தொற்று பரவாமல் இருப்பதற்காக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா டெஸ்ட் எடுத்ததில் 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலையை இரண்டு நாட்களுக்கு அதாவது 48 மணிநேரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் தொற்று உடையவர் களுக்கு இஎஸ்ஐ மூலமாக மாதச் சம்பளம் வழங்கப் படுவார்கள் என்று தெரிவித்தனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!