இன்று (11/08/2020) கிருஷ்ணஜெயந்தி… குழந்தைகளுக்கு கிருஷ்ண வேடமிட்டு கொண்டாட்டம்..

இன்று 11/08/2010 நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணனாக  அலங்கரித்து வீட்டிலேயே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு, அழகு பார்க்க, அலங்காரப் பொருட்களை வாங்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வியாபாரம் சரிவர நடக்கவில்லை, மேலும் கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கான உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள்ளை வைத்து ஜோடித்து வணங்கி வருகின்றனர். இந்த ஆண்டு வியாபாரம் சுமாராகவே நடந்துள்ளது எனவும் வரும் ஆண்டாவது நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

பெற்றோர்கள் கூறுகையில், “இந்த ஆண்டு நாங்கள் கோவிலுக்கு செல்ல இயலவில்லை, அதனால் எங்கள் குழந்தைகளை நாங்கள் கிருஷ்ணர் வேடம் அணியை வைத்து, தெய்வமாக வணங்குகிறோம்@ எனவும் தெரிவித்தனர்.

செய்தியாளர். வி காளமேகம். மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image