கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “Energy Hub Engineering”..

07-08-2020 அன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அனஸ் காம்ப்ளக்சில் Energy Hub Engineering என்ற புதிய கட்டிட கலை சம்பந்தமான நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி செயலாளர் முஹைதீன் ஃபாருக் தலைமையில் கீழக்கரை டவுன் காஜி மௌலவி டாக்டர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜும்ஆ பள்ளி இமாம்கள் மௌலவி முஹம்மது பஷீர் ஆலிம், மௌலவி செய்யது முஸ்தபா ஆலிம், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அரபுத் துறை பேராசிரியர் மௌலவி செய்யது அஹ்மது நெய்னா ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிறுவனத்தின் இயக்குநரான பொறியாளர் ஹுசைன் அல்லாஹ் பக்ஸ்  கூறுகையில், “இந்நிறுவனம் மூலம் நவீன உத்திகளுடன், இயற்கையை பாதுகாக்கும் வகையில், இயற்கை வளங்களுக்கு பாதிப்பு உண்டாகாத வகையலும், சுற்றுபுறசூழலை பேணும் வகையில் அனைத்து பணிகளும் வடிவமைக்கப்படும்” என்றார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image