உசிலம்பட்டி பகுதிகளில் தொடர் சாரல் மழையால் பருத்தி சாகுபடி பணிகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான போத்தம்பட்டி, வகுரணி, கணவாய்ப்பட்டி, நல்லுத்தேவன்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்தி காய்கள் அனைத்தும் வெடிக்க தொடங்கியுள்ளதால் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பருத்தி சாகுபடி பணிகள் பாதிப்படைந்துள்ளது. பருத்திகள் அனைத்தும் மழையால் நனைந்து சேதமாகியுள்ளது, தற்போது பருத்தி கமிஷன் கடைகளில் கொள்முதல் விலை 1கிலோ 30ரூபாய்க்கு விற்பணை நடைபெற்று வருகிறது. நல்ல விலைபோகும் நிலையில் மழையால் பருத்திகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழiயால் சேதமடைந்துள்ள பருத்திக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image