எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்! ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்டம், எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கி.விஷ்ணுபிரசாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது சென்னை சேலம் இடையே அமைக்கப்பட்டுள்ள எட்டு வழி சாலை திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது இந்நிலையில் எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ; எட்டு வழி சாலை திட்டத்தில் விவசாய குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் , 4 மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசி திட்டத்தை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்க இருக்கும் கிராம சபை கூட்டத்தில் எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் கொடுக்கும் மனுவை பெற்று திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image