திருவண்ணாமலை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு- சாலைகள் வெறிச்சோடின.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் போளூர் புதுப்பாளையம் தண்டராம்பட்டு கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 7-வது கட்ட ஊரடங்கின் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தடைகளை மீறி வாகனங்களில் வருபவர்களை அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

செங்கம் செய்தியாளர் சரவணக்குமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply