மதுரையில் கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரையில்  நாளை (02/09/2020) முழு ஊரடங்கு பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுதப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத்ம் உள்ள  5  ஞாயிறகளும் எவ்வித தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் நாளை (02/08/2020) முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இன்றி  உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதன் அடிப்படையில் இன்று (01/08/2020) தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் ஆய்வாளர்கள் பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதில் ஓலிபெருக்கி மூலம் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், மீறி வருபவர்களுக்கு அபராதமும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நோய் தீவிரம் குறையும் எனவும் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply