தீவிர கொரோனா வைரஸ் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை  மதுரை மாநகராட்சி சார்பாக முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பொதுமக்களும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு நேருநகர் கார்த்தி தெருவில் மதுரை மாநகராட்சி சார்பாக நடைபெற்ற முகாமில் சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். இதை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் மூவாயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்த இந்த இலவச பரிசோதனை முகாம் ஆனது பொது மக்களுக்கு இலவசமாகவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும் .இது மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்