பரமக்குடியில் அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோரின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றிய, நகர், பேரூராட்சி,ஊராட்சி, வார்டு வாரியான புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடி கீர்த்தி மஹாலில் மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம். ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அன்வர் ராஜா முன்னிலை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.சரவணகுமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தின் நிறைவாக அனைத்து ஒன்றிய, நகர், பேரூராட்சி செயலாளர்களிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம் படிவத்தை மற்றும் கட்சியின் புதிதாக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாவட்டக் அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர். இதில் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image