நெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

மதுரை-கன்னியாகுமரி நான்கு வழி தேசிய சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் புதர் செடிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதி. உடனடியாக நீக்காவிட்டால் விபத்து நேரிடும் அபாயம்.மதுரை-கன்னியாகுமரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மதுரை மாவட்டம் சமயநல்லூரில் இருந்து தொடங்குகிறது. சமயநல்லூரில் தொடங்கி கப்பலூர் டோல்கேட் வரை இந்த சாலையின் இருமருங்கும் புதர் மண்டிப் போய் இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் முழுவதுமாக மறைத்து கிடக்கிறது.

இந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் சேர்ந்த பாண்டியராஜன் கூறுகையில், இந்த சாலையை காலை மாலை என இரண்டு வேளைகளில் நாள் தோறும் பயன்படுத்தி வருகிறேன். இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய வெள்ளை கோட்டிற்கு இந்தப் புறம் சாலையை பயன்படுத்த முடியவில்லை. காரணம் இரண்டு பக்கமும் கருவேலம் முட்செடிகள் வளர்ந்து நீண்டு ஆக்கிரமித்துள்ளன. இரவு நேரங்களில் கண்டிப்பாக மிக ஆபத்தான பயணம். ஆகையால் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

மற்றொரு வாகனம் ஓட்டி அழகர்சாமி கூறுகையில், தென்னை மரமேறி தேங்காய் வெட்டும் தொழிலை பார்த்து வருகிறேன் இந்த சாலையைதான் நாள்தோறும் பயன்படுத்துகிறேன். இந்த சாலையில் தற்போது அதிகமாக முட்செடிகள் வளர்ந்து கிடக்கின்றன இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை உடனடியாக சீரமைத்து தந்தால் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image