மதுரை அருகே 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனியார் பள்ளி சார்பில் நிவாரணம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கும் மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால்   கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வேலையின்றி பாதிக்கப்பட்ட, வறுமையில் வாடிய 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் வறுமையில் இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவிடும் நோக்கில் மதுரையை அடுத்த மாத்தூர் தனியார் பள்ளி சார்பில் அதன் தாளாளர் சுரேஷ் அரிசி, மளிகை பொருட்கள், முட்டை, காய்கறிகள், கப சுரகுடிநீர், முக கவசம் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்,கொரானா வைரஸால் கடந்த 3 மாதத்திற்கும் மேல் வேலை வாய்ப்பு இழந்த எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இந்த நிவாரணம் பெரும் உதவியாக இருப்பதாக மாத்தூர் கிராம மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பள்ளி தாளாளர் சுரேஷ் கூறும் போது இந்த கொரானா தொற்றானது மதுரை மாவட்டத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மதில அரசும், மாவட்ட நிர்வாகமும் ஊரடங்கு அமல் படுத்தியதால் வேலைக்கு செல்ல முடியாமல் நிறைய குடும்பம் வறுமையில் வாடுகிறது .அதனால் அவர்களுக்கு உதவிடும் நோக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து நிவாரணம் வழங்குவதாகவும் தெல்வித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply