Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அரசு மருத்துமனை அலட்சியத்தால் மூதாட்டி மரணமா??…SDPI கட்சி கண்டனம்..

இராமநாதபுரம் அரசு மருத்துமனை அலட்சியத்தால் மூதாட்டி மரணமா??…SDPI கட்சி கண்டனம்..

by ஆசிரியர்

நேற்று 12-06-2020 கீழக்கரையைச் சேர்ந்த ஜீம்மாபீவி எனும் நோயாளி காலை 11மணியளவில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இராமநாதபுரம் தலைமைஅரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை சென்ற நபருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலைகழிப்பு செய்ததாக தகவல்கள் பரவிவருகிறது.

சிவகங்கைக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சில் பகல் 12 மணிக்கு ஏற்ற பட்டு 2 மணி நேரம் காக்க வைக்கபட்ட நிலையில் மூச்சு திணறல் அதிகமாகி ஆம்புலன்ஸில் அப்பெண்மணி உயிர்நீத்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (13/06/2020) கீழக்கரைநகர் SDPI_கட்சியின் நகர் தலைவர் ஹமீது பைசல்  தலைமையில் தமிழ் மாநில பொது செயலாளர் பி.அப்துல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் மரணமடைந்த ஜும்மா பீவி குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு தலைமை அரசு மருத்துவ மனையில் நடந்த விஷயங்களை கேட்டறிந்து அரசு தலைமை மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் எஸ்டிபிஐ_கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், SDPI கட்சியின் செயலாளர் பக்ருதீன், கீழை அஸ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்_கீழைஅஸ்ரப்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!