மதுரை மண்டலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கிய பேருந்து போக்குவரத்து!

தமிழக அரசு இன்று முதல் அரசு பேருந்துகள் 50% இயங்கலாம் எனவும் இதில் மண்டல வாரியாக எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை மண்டலத்தை பொருத்தளவில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் வழித்தடங்களில் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு அரசின் இ பாஸ் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வழக்கம்போல இயங்கத் தொடங்கியது.

இதில் வரும் பயணிகளுக்கு தெர்மாமீட்டர் கொண்டு வெப்பம் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி அவர்களுக்கு அளிக்கப்பட்டு முக கவசம் அணிந்த பிறகே பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

நகரப் பேருந்தில் இருபத்தி ஒரு இருக்கைகளும் வெளியூர் செல்லும் பேருந்துகளில் 32 இருக்கைக்கு மட்டுமே அனுமதி மற்ற இருக்கைகளில் அமர தடை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களுக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று முதல் நாள் என்பதால் சற்று கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது மேலும் பெரியார் பேருந்து நிலையங்களில் மாநகராட்சி சார்பாக பயணிகளுக்கான நிழற்குடை தேவை எனவும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image