விருதுநகரில் சாலையோரம் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்.. குவியும் பாராட்டு..

விருதுநகரில் சாலையோரம் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து பிரசவம் பார்த்த செவிலியருக்கு குவியும் பாராட்டு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் சாலையோரம் சுற்றித்திரிந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை போதிய எடையுடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தாய்க்கு மன நல மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணிற்கு இயற்கையாகவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பச்சிளம் குழந்தையை நாளை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை உரிய நேரத்தில் மீட்டு பிரசவம் பார்த்த கிராமப்புற செவிலியரளர் சாந்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image