Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காவல்துறை எச்சரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காசி என்கிற சுஜித் பேஸ்புக்¸ இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல போலியான கணக்குளை தொடங்கி அதன் மூலம் பல வசதியான மற்றும் நன்கு படித்த பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவருடைய அன்பான பேச்சால் பல பெண்கள் இவரது உண்மை முகம் தெரியாமல் இவரை நற்பண்புள்ளவர் என்று எண்ணி சமூக வலைதளங்களில் பழகி வந்ததையும் தாண்டி பல பெண்களின் தனிப்பட்ட தொடர்பு எண்களை பெற்று தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவார். பெண்களுடன் நல்ல நட்பை பெற்ற பிறகு காசி பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொள்வார்.

மேலும் பெண்களுடனான தனிப்பட்ட வீடியோ அரட்டைகளின் போது அவர் எடுத்த தனிப்பட்ட புகைப்பட ஸ்கிரீன் சாட்டுகள் அவரது தொலைபேசியில் வைத்துக்கொள்வது¸ பெண்கள் அனுப்பிய தனிப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேமித்து வைத்துக்கொள்வதையும் வழக்கமாக செய்துள்ளார். மேலும் அவசர மருத்துவத் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவர் பெண்களிடம் பணம் கேட்கும் போது இவரது உண்மையான முகம் தெரியாத பல பெண்கள் அவரை நம்பி தேவையான பணத்தை அவருக்கு வழங்கியுள்ளனர். இது மாதிரியாக காசி லட்சக்கணக்கான பணத்தை பல பெண்களிடம் மிரட்டி பறித்திருக்கிறார். பெண்கள் காசியின் மோசடியை பற்றி தங்கள் நண்பர்கள் மூலம் அறிந்துக்கொள்ளும் போது பெண்கள் காசியை முற்றிலுமாக நிராகரித்து தவிர்த்து வந்துள்ளனர். பெண்கள் காசியை நிராகரிக்க தொடங்கும் போது அவர் பெண்களின் தனிப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் கேட்கும் தொகையை கொடுத்துள்ளனர்.

இதை வழக்கமாக வைத்து அவர் தொடர்ந்து பெண்களை அடிக்கடி பணம் கொடுக்குமாறு தொந்தரவு செய்து இலட்சக்கணக்கான பணத்தை பறித்துள்ளார். மேற்கண்ட முறையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் பயன்படுத்திய கைபேசியை கைப்பற்றி மேற்கொண்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது மாதிரியாக பல பெண்கள் காசி மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஏமாற்றப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்று எண்ணி இவர் மீது இதுவரை எந்த புகார் மனுவும் கொடுக்கவில்லை.

மேலும் காசியை பற்றிய புகார்களையோ¸ தகவல்களையோ பாதிக்கப்பட பெண்களோ அல்லது காசியை பற்றி தகவல் தெரிந்த நபரோ கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்ரீநாத் இ.கா.ப அவர்களிடம் தனிப்பட்ட தொடர்பு எண்ணில் (9498111103) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இரகசிய தகவல் கொடுப்போர் பற்றிய விபரங்கள் முழுமையாக காப்பற்றப்படும். பெண்கள் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் பழகுவது¸ தங்களை பற்றிய விபரங்களை பகிர்வது¸ வெளியிடங்களில் சந்திப்பது போன்றவை ஆபத்தை ஏற்படுத்தும். எச்சரிக்கையாக இருப்பது பேராபத்திலிருந்து காப்பாற்றும்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!