அரசு மதுபானக்கடை திறப்பதை கண்டித்து சுரண்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன முழக்கம்…

அரசு மதுபானக்கடை திறப்பதை கண்டித்து சுரண்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன முழக்கம்…

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் திரளான பொதுமக்கள் மற்றும் பெண்களின் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு கட்சிகள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின் படி கீழச்சுரண்டையில்
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மதுக்கடைகளை திறக்காதே! என்ற முழக்கத்துடன் விசிக மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் தலைமையில் அவரது வீட்டின் முன்பு பதாகைகளை கையில் ஏந்திய நிலையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதில், கண்ணன்
ப.கலைச்செல்வன் ஆகிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட விசிக வினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்