தனியார் தொண்டு சார்பாக மதுரை காவல் துறை இணைந்து ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன். வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம் சாட்டையடி காலணி, நரிக்குறவர் காலணி ஆகிய இடங்களில் சுசி ஹெல்த் கேர் ட்ரஸ்ட் சார்பாக Dr. முருகேசன் தலைமையிலான குழுவினர் உணவுக்கு கூட வழியில்லாத ஏழை, எளியவர்கள் 1200 பேருக்கு மதிய உணவு வீடு வீடாக சென்று வழங்கியும் மற்றும் மிகவும் வயதான நபர்களை தேர்ந்தெடுத்து 25 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், உளுந்து மற்றும் 7 வகையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சிலைமான் காவல் ஆய்வாளர் .மாடசாமி, தலைமை காவலர் மணிமாறன், காவலர்கள் ரமேஷ், பாண்டி ஆகியோர் தலைமையில் வழங்கி உதவி செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்