ரோட்டரி சங்கம் சார்பில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நிழல் குடை ……..

கொரொனா வைரஸ் காரணமாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து மருத்துவமனை வாசலில் வைத்து மருத்துவம் செய்து வருகின்றனர். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகள் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஒதுங்க இடமில்லாமல் தவிப்பதை அறிந்த கீழக்கரை  ரோட்டரி சங்கம் வைத்தியம் பார்க்க வருபவர்களுக்காக நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளது.

இதை  ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர், பொருளாளர் செய்யது முகமது ஹசன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், கீழக்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜாகிர் உசேன்,  நிழல் குடையை பார்வையிட்டார்கள்.

கீழை நியூஸ்
SKV சுஐபு