வைரஸ் தடுப்பு க்காக ஊரடங்கு நிலையிலும் குடிநீருக்காக அலைமோதும் கிராம மக்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , நூத்து லாபுரம் ஊராட்சி, தெற்கு விராலிப்பட்டி, வடக்கு விராலிப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய கூலிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இந்நிலையில் தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டு ஒரே இடத்தில் ஊரின் மையப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தத் தண்ணீரை திறந்து விடுவதால் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றாக திரண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிடித்து வருகிறார்கள். ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு ஒருவரும் சண்டையிடும் போது தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரானா பரவி விடுமோ என்ற அச்சத்தையும் விட்டு தண்ணீர் பிடிப்பதில் மிகுந்த அளவில் போராடி வருகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை சூரியும் அலட்சியத்தில் இருப்பதாகவும் பொதுமக்கள் குறை கூறுகிறார்கள்.
இந்த ஒரே இடத்தில் தண்ணீர் பிடிப்பதை தெருக்கள் தெருக்கள் தோறும் பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் மிகுந்த அளவில் அச்சத்தில் உள்ளார்கள்.எனவே இன்றைய காலகட்டத்தில் இக்கிராம மக்களுக்கு உடனடி தீர்வாக ஒரே இடத்தில் தண்ணீர் வழங்குவதை மாற்றி வேலை அங்கங்கே அமைப்பு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தினந்தோறும் தண்ணீருக்காக ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக்கொண்டு பிடிப்பதை இந்த அரசு இந்த தருணத்திலும் வேடிக்கை பார்ப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்பதை இந்த மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. எனவே இந்த கிராமத்தின் மீது அதிகாரிகள் பார்வை படுமா?

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image