உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல்த்துறையினரிடம் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி, உசிலம்பட்டியில் லாரி ஒட்டுநராக உள்ளார் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு காய்கறி வாங்க உசிலம்பட்டி ஜவுளிக்கடை தெருவில் வரும் போது கீழே கட்டுக்கட்டாக 4 லட்சம் ரூபாய் சாலை கிடந்ததைக் கண்ட பாண்டி அதை எடுத்து சற்று தொலைவில் பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திடம் வழங்கினார்.பணத்தை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் உசிலம்பட்டி டி.எஸ்.பி. ராஜாவிடம் வழங்கிய நிலையில் கீழே கிடந்த பணத்தை மனிதாபிமானத்தோடு எடுத்து போலிசாரிடம் ஒப்படைத்த டிரைவர் பாண்டிக்கு டி.எஸ்.பி. ராஜா பாராட்டி பரிசு வழங்கினார்.

மேலும் இந்த பணம் யாருடையது என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தியதில் பணக்கட்டில் இருந்த வங்கி ரசிதை வைத்து வங்கிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் உசிலம்பட்டி செல்வி மகால் தெருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவருடையது என்பதும் சற்று நேரத்திற்கு முன்பு தான் வங்கியிலிருந்து எடுத்து சென்றதும் விசாரணை தெரியவர அவரை தொடர்பு கொண்டு வங்கிக்கு நேரில் வரவழைத்து உரியவரிடம் டி.எஸ்.பி.ராஜா ஒப்படைத்தார்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image