Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “கட்டட வடிவமைப்பு பொறியாளர் – (Architecture)”.. நகர மக்களுக்கு மட்டுமல்ல… புறநகரில் படிக்கும் மாணவர்களையும் “NATA” தேர்ச்சி தேர்வுக்கு தயார்படுத்துகிறது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி…

“கட்டட வடிவமைப்பு பொறியாளர் – (Architecture)”.. நகர மக்களுக்கு மட்டுமல்ல… புறநகரில் படிக்கும் மாணவர்களையும் “NATA” தேர்ச்சி தேர்வுக்கு தயார்படுத்துகிறது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி…

by ஆசிரியர்

NATA (National Aptitude Test in Architecture) எனும் கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்புக்கான நுழைவுத் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்ககான நீட் தேர்வுக்கு  சமமாக கல்வியாளர்களால் பார்க்கப்படுகிறதுகாரணம் பிற பொறியியல் படிப்பு போல் மதிப்பெண்களை மற்றும் அடிப்படையாக கொண்டு கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்புக்கு சேர்ந்து விட முடியாது.  கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்பை பொறுத்தமட்டில் மாணவரின் தகுதியை NATA   எனும் நுழைவுத் தேர்வு மூலம் கண்டறியப்படுகிறது.  இத்தேர்வு இரண்டு நிலையாக வரைதல் (Drawing) எனும் நேர்முக தேர்வும் (offline), இரண்டாம் கட்டமாக இணையவழி (online) மூலமாக தகுதித் தேர்வும் (Aptitude Test) மொத்தம் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டு கட்டட வடிவமைப்பு பொறியாளர் 5 வருட படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பொதுவாகவே இத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நகரப்புறங்களில் மட்டுமே இருந்து வந்தது, இது தொடர்பான படிப்பில் புறநகர் மற்றும் கிராமத்து மாணவர்கள் பின்தங்கியே உள்ளனர் என்றே கூறலாம்.  ஆனால் இந்த குறையை போக்கும் வகையில் கீழக்கரையில் மிகவும் பழமையான முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டட வடிவமைப்பு பொறியாளர் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 

இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டமாக மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.  இதற்கான முன் பதிவுகள் 16மார்ச் மற்றும் 4மே மாதம் வரை நடைபெறுகிறது.  இந்த பயிற்சி முகாம் புறநகர் மற்றும் கிராமத்து புற மாணவர்களுக்கு பொருட் செலவும் இல்லாமலும், அதிக தூரம் பயணிக்காமலும் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று வரை பல திறமைமிக்க கட்டட வடிவமைப்பு பொறியாளர்களை உருவாக்கிய முகம்மது சதக் கல்லூரியின் கட்டட வடிவமைப்பு பொறியாளர் துறை மூலமாக நடத்தப்படுவது குறிப்பிடதக்கதாகும்.

இந்நுழைவுத் தேர்வு சம்பந்தமாக மேல் விபரங்களுக்கு 6385651990, 9840472165, 8122268344, 7708033606, 9500330246 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!