ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி

மதுரை மாவட்டம் மதுரை ராமேஸ்வரம் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் தெற்கு வாசல் பாலத்திற்கு கீழ் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் அவர் மீது மோதியது. இதில் இவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவர் யார் என விசாரணையில் இறங்கினார். எனினும் அடையாளம் காண முடியவில்லை. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். மதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் உடனடியாக மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மதுரை இரும்புப் பாதை காவல் நிலையம் தொடர்பு கொள்ளுமாறு இருப்புப்பாதை காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..